20 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவில் ஊதாரியாக சுற்றித் திரிந்த நபருக்கு கிடைத்த கௌரவம்…!!

போதைக்கு அடிமையாகி லண்டனில் வெறுமனே சுற்றி திரிந்த நபருக்கு பேருந்து ஓட்டுனராக பணிகிடைந்த நிலையில், லண்டனின் சிறந்த பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

பாட் லாசன் என்ற நபர் சிறுவயதில் இருந்தே தனது பெற்றோர் பேச்சை கேட்காமல் வளர்ந்துள்ளார்.சிறுவயதிலேயே திருடுவது, போதை பழக்கத்துக்கு அடிமையாவது என லாசனின் செயல் மோசமாக இருந்தது.பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சாலையிலேயே 20 ஆண்டுகள் தங்கி வந்துள்ளார். வெறுமனே தூங்குவது, ஊர்சுற்றுவது என்றே இருந்துள்ளார்.லாசனுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் இப்படியே ஊதாரியாக இருந்தார்.இந்நிலையில், தன் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்து திடீரென பயந்த லாசன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அவரை உள்ளூர் தொண்டு நிறுவன ஆட்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சைக்கு பின்னர் திருந்தி வாழ நினைத்த லாசனுக்கு லண்டன் பேருந்தில் ஓட்டுனர் பணி வழங்கப்பட்டது.இதையடுத்து தனது பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு பயணிகளையும் மக்களையும் லாசன் கவர்ந்தார்.தற்போது அவரது பயணிகளே, லண்டனின் சிறப்பான பேருந்து ஓட்டுனர் என்ற பட்டத்தை லாசனுக்கு வழங்கியுள்ளனர்.

இது குறித்து லாசன் கூறும் போது,  நான் சிறப்பாக பணி செய்வதாக ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் Hello London விருது வழங்கப்பட்டது.அதே போல அக்டோபரில் பிரித்தானிய பேருந்து விருது வழங்கப்பட்டது.

என் பேருந்தில் ஏறும் ஓவ்வொரு பயணிக்கும் சென்று சிரித்த முகத்துடன் நான் வணக்கம் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வேன்.தற்போது என் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுத முயன்று வருவதாக கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்