இன்னும் சில வாரங்களில் கொழும்பு அரசியலில் ஏற்படப் போகும் அதிரடித் திருப்பம்….!!

அடுத்து வரும் சில வாரங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பூரண ஆதரவுடன் கரு ஜயசூரியவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன் மூலம் இலகுவாக வெற்றி பெறலாம் என ரணில் நம்பிக்கை கொண்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்ய வேண்டும். பிரதமருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை கரு ஜயசூரியவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய களநிலைகள் தற்போதுள்ளதாக என்பது குறித்து சபாநாயகர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் போது, துணிச்சலாகவும் பக்கசார்பற்ற முறையிலும் சபாநாயகர் செயற்பட்டிருந்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் சபாநாயகர் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், யாரும் எதிர்பாரத வகையில் சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறங்கி வெற்றியை தனதாக ரணில் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்