முற்றிய வாய்த் தர்க்கம்….! தனது தந்தையை கோரமாக வெட்டிக் கொலை செய்த மகன்..!!

தந்தையைக் கத்தியொன்றினால் வெட்டியும், கொத்தியும், கோரமாகக் கொலை செய்த மகனை, சியாம்பலாண்டுவைப் பொலிசாஸார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த டி.ஜி.கொர்னேலிஸ் என்ற 96 வயது நிரம்பிய முதியவரே, வெட்டியும், கொத்தியும், கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரத்த வெள்ளத்தில் கிடந்த கொலை செய்யப்பட்டவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்

கொலை செய்யப்பட்டவரின் மகன், தானே தனது தகப்பனைக் கொலை செய்ததாகக் கூறி, பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.தகப்பனுக்கும், மகனுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்ற, ஆத்திரமுற்ற மகன், கத்தியொன்றினை எடுத்து, தகப்பனை தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்