பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர்கள், அதிபர், மீது தாக்குதலை நடத்திய யாழ் மாணவர்களுக்கு நேர்ந்த கதி….!!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் உட்பட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்மராட்சி, நாவற்குழி மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் இருவர் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, அதிபர், ஆசிரியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை போதைப்பொருளுக்கு அடிமையாகியமையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் இவர்களை தண்டித்துள்ளனர்.பின்னர் இந்த மாணவர்கள் தங்கள் நண்பர்கள் சிலரை அழைத்து சென்று பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதோடு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்