இருப்பதற்கு உறைவிடம் இன்றித் தவித்த முதியவருக்கு இராணுவத்தினர் செய்த நெகிழ்ச்சியான செயல்…..!! பெரும் வியப்பில் தமிழ்மக்கள்…!!

முல்லைத்தீவு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் வசித்துவந்த வயோதிப தாயார் ஒருவருக்கும் அவரது பாராமரிப்பில் தாய் தந்தையினை இழந்து வாழ்ந்து வந்த சிறுமி ஒருவருக்குமாக 5.5 இலட்சம் ரூபா செலவில் படையினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு  நேற்று முன்தினம் (10)  கையளிக்கப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் வீட்டுத்திட்டம் எதுவும் கிடைக்காத நிலையில், தற்காலிக கொட்டிலில் வாழ்ந்து வந்த இருவர் கடந்த மழைவெள்ளத்தினால் இவர்களின் தற்காலிக கொட்டில்களும் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், கிராம அபிவிருத்தி சங்கம் 57 ஆவது படைப்பிரிவினருடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இணங்க 5.5 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்றினை 57 ஆவதின் 2ஆவது படைப்பிரிவின் 6ஆவது சிங்க றெஜிமன்ட் பிரிவினரால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வீடு அமைப்பதற்கான நிதி உதவியினை தெற்கினை சேர்ந்த சித்தார்த்த பதனம் என்ற பௌத்த சங்கம் உதவி வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் கிராம அலுவலகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் 57 இன் 2 ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் பிரியந்த தசநாயக ஆகியோர் கலந்து கொண்டு இவர்களுக்கான வீட்டினைக் கையளித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்