இலங்கை வாழ் வாகனச் சாரதிகளுக்கு ஆப்பு…!! விரைவில் வருகின்றது புதிய நடைமுறை…..!! இனி எங்கும் ஓடி தப்பிக்க முடியாது….!!

மோட்டார் வாகனங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் இந்த வருட இறுதி முதல் வானலை அலைவரிசை அடையாளத்தை (The Radio-Frequency Identification – RFID) பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே.ஜெகத் சந்திரஶ்ரீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.குறித்த முறையை கொண்டு வாகனங்களை நிறுத்தாமலேயே பொலிஸாருக்கு வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் குற்றமிழைக்கும் வாகன சாரதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இந்த வானலை அலைவரிசை கருவிகள் விரைவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த கருவிகள் ஏற்கனவே இந்தியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்