சற்று முன்னர் இலங்கையின் அமைச்சரவை விஸ்தரிப்பு…!! மீண்டும் அமைச்சரானார் ராதாக்கிருஷ்ணன்..!!

விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.புதிய அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பகுதியளவில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக வி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, கல்வி ராஜாங்க அமைச்சராக வி. ராதாகிருஷ்ணன் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள்

  1. கௌரவ ரவீந்திர சமவீர –      தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
  2. கௌரவ வி.ராதாகிருஷ்ணன் – விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

பிரதியமைச்சர்

  1. கௌரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர்

இதனிடையே கௌரவ அமைச்சர் தயா கமகே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்