ஆசையாக அக்கா வீட்டிற்கு சென்ற 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்…!!

இந்தியாவில் அக்கா வீட்டுக்கு சென்ற பாடசாலை மாணவி துணிகளை காய போட வயரை கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தின் கஜியாபாத்தை சேர்ந்தவர் ராதா சர்மா (14). எட்டாம் வகுப்பு மாணவியான இவர் திருமணமான தனது மூத்த அக்கா சஞ்சனாவை காண அவர் வீட்டுக்கு சென்றார்.அங்குள்ள மொட்டை மாடியில் துணிகளை காயப்போடுவதற்காக அலுமனியத்தால் ஆன வயர்களை ராதாவும், சஞ்சனாவும் கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தொங்கி கொண்டிருந்த மின்சார வயர் மீது அலுமினிய வயர் உரசிய நிலையில் ராதாவுக்கும், சஞ்சனாவுக்கு ஷாக்கடித்தது.இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சஞ்சனாவுக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தார்.

ஆனால், பலத்த காயமடைந்து மயங்கிய ராதாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.சம்பவம் குறித்து பொலிஸாரிடம் ராதாவின் குடும்பத்தார் புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு இன்னும் செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்