இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி….!! இறுதி வரை போராடித் தோற்றது இலங்கை….!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் மார்டின் கப்டில் 138 ஓட்டங்களையும், கேன் வில்லியன்சன் 76 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க, நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து, 372 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் 326 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதில் இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக குசல் பெரேரா 102 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 76 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் நீஸம் 3 விக்கெட்டுகளையும், இஷ் சொதி, லொக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்டின் கப்டில் தெரிவு செய்யப்பட்டார்.இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்