இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனிக்கு நடனம் கற்றுத் தரும் செல்ல மகள்…!! (இணையத்தில் வைரலாகும் காணொளி…)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, அவரது மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் செலவழிக்கும் தோனி, தன்னுடைய மகளுடன் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனியும், அவரின் மகள் ஸிவாவும் என்ன செய்தாலும் இணையதளத்தில் அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ எதுவாக இருந்தாலும் வைரலாக வலம்வரும்.

இந்நிலையில்இ,சமீபத்தில் தோனி ஸிவாவுடனான ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜெர்ஸியை அணிந்துள்ள தோனி, தனது மகளின் நடனத்தை அப்படியே பார்த்து ஆடுகிறார். இந்த வீடியோ காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.மேலும், அந்த வீடியோ பதிவில் ‘நாங்கள் டான்ஸ் ஆடும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்க்கு முன்பாக முன்னதாக இதேபோல் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. தனது தந்தையை பார்த்து ‘எப்படி இருக்கீங்க’ என்று ஜிவா கேட்க, அதற்கு தோனி ‘நல்லா இருக்கேன்’ என பதில் அளிக்கின்றார்.

இதைத்தொடர்ந்து ஜிவாவும் தோனியும் போஜ்பூரி மொழியில் பேசிக் கொண்டனர். இந்த வீடியோவை தமிழக ரசிகர்கள் வைரலாக்கினர்.

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரன்வீர் – தீபிகா திருமணத்தில் கலந்து கொண்டார். அதேபோல் தோனி சமீபத்தில் மும்பையில் தனது மனைவி ஷாக்ஸியின் 30வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யாஇ தோனியுடனான படத்தை பகிர்ந்திருந்தார். இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை.

முன்னாள் நியூஸிலாந்து கப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளருமான ஃப்ளெமிங் ‘தோனியின் பலம் என்பது இந்திய அணிக்கு அளவிட முடியாத ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்