வடக்கின் புதிய ஆளுனர் யார்…? பெயர்ப்பட்டியலில் E.P.D.P தவராசா…?

வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மற்றும் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் செயலராகவிருந்த கலாநிதி. விக்னேஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிக்கான பட்டியலில் ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கமையவே, வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்கும் முயற்சியில் ஜனாதிபதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்