நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் சாங் இ-4 விண்கலம்…!!

சீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது.அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் “இருண்ட பகுதி´ என்று அழைக்கிறார்கள்.அந்தப் பகுதியில் முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சீனாவின் சாங் இ-4 விண்கலம் இந்த மாதம் 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது.இந்த நிலையில், நிலவின் “இருண்ட பகுதி´யில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.அதனடிப்படையில் குறித்த விண்கலம் இன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்