லக்ஸபான நீர்வீழ்ச்சியில் காதலியுடன் நீராடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

லக்ஷபான நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிகொண்டிருந்த பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்துள்ளவர் OLDIPUPO EYIPEMI OSHUNNIYA என்ற 29 வயதான பிரித்தானிய இளைஞர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்துள்ள இளைஞர் தனது காதலி மற்றும் சில நண்பர்களுடன் நோட்டன்பிரிஜ் பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை தனது காதலி மற்றும் நண்பர்களுடன் லக்ஷபான நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீராடி கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.பின்னர் அவரின் நண்பர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மற்றும் நோட்டன்பிரிஜ் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இளைஞரின் மரணம் தொடர்பில் நொட்டன்பிரிஜ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்