தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டாலும் வீட்டிற்குச் செல்லாது தனது அணிக்காக விளையாடிய ஆப்கான் வீரர்….!!

தனது தந்தை இறந்த செய்தி அறிந்தும் சொந்த நாட்டுக்கு செல்லாமல் தனது அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை ரசிகர்களும், சக வீரர்களும் பாரட்டி வருகின்றனர்.ரஷித் கான் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் பிக்பாஷ் இருபதுக்கு 20 போட்டிகளில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந் நிலையில் கடந்த 30 ஆம் தகதி அவரின் தந்தை காலமாகி விட்டதாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர் தனது சொந்த நாட்டுக்குச் செல்லாமல், அவுஸ்திரேலியாவில் தனது அணிக்காக விளையாடி தந்தைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கிடையே கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியின் போது, 9 ஆவது ஓவருக்காக ரஷித் கான் பந்துப் பரிமாற்றம் செய்ய வந்தபோது, மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றனர்.இப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் செய்த ரஷித் கான் 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தனது தந்தையின் இறப்பையும் பெருட்படுதத்தாமல் அணிக்காக விளையாடிய ரஷித் கானை சக வீரர்கள் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தனர்.

இப் போட்டியில் ரஷித் கான் சார்ந்திருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்