தனது அதீத திறமையினால் இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழன்..!! பதவி உயர்வு வழங்கி கௌரவம் செய்த ஜனாதிபதி மைத்திரி..!!

தமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.பிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார்.பிரிகேடியர் ஸ்ரீனகா, இராணுவத்தின் மின்னியல் மற்றும் பொறியியல் பிரிவின் பணிப்பாளராவார்.இதனைத்தவிர லெப்டினன்ட் கேணல்கள், கேணல் தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். 42 மேஜர் தர அதிகாரிகள் லெப்டினன்ட் கேணல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் மாத்திரம் ஆர்.டி அன்சார் என்ற தமிழ் பேசும் அதிகாரி உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை இந்த பதவி உயர்வுகளின் போது 2013ஆம் ஆண்டு முதல் பதவியுயர்வு வழங்கப்படாமல் இருந்த 41 பேருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்