புத்தாண்டு புலர்ந்த பொழுதில் நள்ளிரவில் கலக்கிய தாமரைக் கோபுரம்….!! (காணொளி இணைப்பு)

ஆசியாவின் அதிசயமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் புத்தாண்டை முன்னிட்டு வண்ணமயமாக மாறியுள்ளது.தாமரை கோபுரத்திற்கு முன்னால் வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக புத்தாண்டினை வரவேற்பதற்கு கொழும்பு மக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றது.அதற்கமைய கொழும்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு தாமரை கோபுரத்திற்கு அருகில் மிகவும் பிரம்மாண்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ஆசியாவின் மிக உயரமான கட்டடமாக கருதப்படுப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல வண்ண நிற விளக்குகளுக்கு மத்தியில் வான வேடிக்கைகள் வெடித்து புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்