இலங்கையில் இன்று மீண்டும் திடீரெனத் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்….!!

உலகின் மிகப்பெரிய விமானம் எனப்படும் அண்டனோவ்-380 (A-380) விமானம் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் விமான ஊழியருக்கு ஏற்பட்ட திடீர் வயிறுவலி காரணமாகவே இது அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-408 எனும் விமானமே டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குச் சென்றுகொண்டிருக்கும்போது இவ்வாறு தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் இலங்கை வான்பரப்பில் வெளிப்பட்டு இந்து மா சமுத்திரப் பகுதிக்கு மேலாக இலங்கைக்கு மிக அண்மித்த பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமான ஊழியர் ஒருவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இலங்கைக்கு திருப்பப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

காலை 10:25க்கு தரையிறக்கப்பட்டு பின்னர் மதியம் 12:15க்கு மீண்டும் பறந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்