உலகமே வியக்கும் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை….!! ஜப்பான் வாழ்வது 3018ம் ஆண்டில்!!

உழைப்பிற்குப் பெயர் போன ஜப்பான் நாடானது வளர்ச்சி, கண்டுபிடிப்பு, சேவை என்று முன்னேற்றமடைந்துள்ள அதேவேளை, ​​உலகின் மற்ற பகுதிகளும் நாடுகளும் பின்தொடரும் வண்ணம் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.ஜப்பான் என்கின்ற வார்த்தை நம் காதில் விழும் போதெல்லாம் அது நமக்கு பல முற்போக்கான விடயங்களை நினைவுபடுத்தும். ஆனால், அது பெரும்பாலும் ரோபோக்கள் என்கிற குறுகிய வட்டத்திலேயே முடிந்து விடும்.

நாம் 2018-இல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-இல் வாழ்கிறது. ஏனெனில் ஜப்பான் ஹோட்டல்களில் மற்றும் கடைகளில் ரோபோக்கள் பணிபுரிகின்றன என்பதைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டு உள்ளோம். இதர சில ஜப்பான் சமாச்சாரங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக் கூட இருக்க மாட்டோம்.

ஜப்பானில் அப்படி என்னதான் உள்ளது?

ஜப்பானில் ‘அரிசி நெல் கலை’ என்பது மிகவும் பிரபலமான ஒரு கலையாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல்வேறு வகையான அரிசி நடுதல் மூலம் படங்களை உருவாக்குவது ஆகும்.

இது சமீபத்தில்தான் மிகவும் பிரபலமாக உருவானது என்பதும், பாரம்பரியம் மிக்க ஜப்பானிய கலை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. சதுரங்க வடிவில் குட்டி நாய்களின் முடிகளை வெட்டி விடும் ஒரு புதிய போக்கை ஜப்பான் ஆரம்பித்து வைத்துள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு புல்லட் ரயில் சப்பாத்து போல வடிவமைக்கப்பட்டுள்ளதையும் காண முடியும்.சீகியா ஓஷோ டோம், உலகின் மிகப்பெரிய உள்ளரங்கு கடற்கரைகளில் ஒன்றாகும்.

ஜப்பானிய கழிப்பறைகளில் கை கழுவும் நீரானது வேறு பயன்களுக்காக மீண்டும் சின்க்குகளில் சேகரிக்கப்படும்.ஜப்பானில் உள்ள குளியலறைகளில் குழந்தைகளுக்கான நாற்காலிகளை காணலாம்.

ஜப்பானில் ஒரு ஹோட்டல் உள்ளது. அதில் முழு ஊழியர்களும் ரோபோக்களாக உள்ளன. ஜப்பானில் நீங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். டோக்கியோவில் ஒரு பொலிஸ் சாவடிக்குள் வழிகேட்ட போது, ஒரு விரிவான கையால் வரையப்பட்ட வரைபடத்தை அதிகாரி ஒருவர் கொடுத்துள்ளார்.

நம்மூரில் இருக்கும் கார் தரிப்பிடம் போல ஜப்பானில் அம்பர்லா தரிப்பிடம் உள்ளது. இங்கு உங்கள் குடையை பூட்டி வைக்கலாம். கையில் தூக்கிக்கொண்டு அலையும் அவசியம் இருக்காது. சில ஜப்பானிய கண்டுபிடிப்புகள் வேடிக்கையானவை, ஆனால் அவை மிகவும் முற்போக்கானவை என்பதை நிராகரிக்க முடியாது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்