தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து…..!! பொதுமக்களே ஜாக்கிரதை….!!

தொலைத் தொடர்பு என்பது மனித இனத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகி விட்ட இன்றைய உலகில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உலகம் மிகவும் சுருங்கி விட்டது. நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மறு மூலையில் நடக்கும் விடயங்களை நம் காலடிக்கே கொண்டு வந்து சேர்க்கும் நவீன தொழில் நுட்பங்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்…எனினும், என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் அதன் வளர்ச்சியில் நன்மைகள் எவ்வளவிற்கு இருக்கின்றதோ அதேயளவிற்கு தீமைகளும் அதிகம் இருப்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.. மனிதர்களின் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி இன்று பேராபத்தை நோக்கிப் போயக் கொண்டிருக்கின்றது.

இணையத்தின் வருகை இன்று எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட் தொலைபேசிகள் கணணிப் பாவனைகளை இன்றியமையாததாக்கி விட்டாலும் இவற்றpனால் மனித குலத்தpற்கே பேராபத்து இருக்கின்றது என்று எத்தனை பேருக்குத் தெரியும்..?
ஆம் எண்ணற்ற நோய்கள் நம்மை அறியாமலேயே நமது வீடு தேடி வரத் தொடங்கி விட்டன. தொலைபேசிகளில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களினால் மனிதர்கள் தம்மையறியாமலேயே பாரிய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தலையிடி முதற்கொண்டு புற்று நோய் வரை இவற்றின் தாக்கம் பலரையும் பாதித்திருக்கின்றது.நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களுக்கும் வந்து விட்ட தொலைத் தொடர்புக் கோபுரங்கள் நமது உயிருக்கே உலைவைக்க வல்லவை என்பது உங்களுக்குத் தெரியுமா…?

ஆம், நமது அயல் நாடான இந்தியாவின் தென் கோடியிலுள்ள தமிழகத்தில் மிக அண்மையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை உதாரணமாக தருகின்றோம்…

அலைபேசி கோபுரங்களிலிருந்து 50 மீ முதல் 300 மீ தொலைவு வரை கதிரியக்கம் நிலவுவதை தகுந்த ஆதாரத்துடன் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பப் பேராசிரியர் கிருஷ்குமார் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அளித்துள்ள தனது அறிக்கையில் நிரூபித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ராம்நாத் கார்க் என்பவரின் சிறுவயது மகன் திடீரென இறந்துவிட்டான். அதற்கான காரணத்தைத் தேடும் போது அவர் வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் தான் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டறியப்பட்டது.இதேபோல் தொலைத் தொடர்புக் கோபுரத்திற்கு அருகே வசித்துவரும் எஸ்.கே விஜயா பட் என்னும் பெண்மணி மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நோய்க்கு காரணம் தொலைத் தொடர்புக் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த அலைபேசிக் கோபுரங்கள் மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப்பகுதிகள் பாடசாலைகள் மருத்துவமனைகள் போன்றவற்றின் அருகில் இயங்குவதற்கு அனுமதியில்லை. இந்தக் கோபுரங்களை 50மீ முதல் 1000மீ.க்கு அப்பால் தான் அமைக்க வேண்டும். ஆனால் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு செயல்படும் இந்நிறுவனங்கள் அரசு விதித்திருக்கும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும் அடுக்குமாடிகளிலும் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்.தொலைத் தொடர்புக் கோபுரங்களினால் நாம் எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்!

இத்தகைய கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் கதிரியக்கங்களும் மிகவும் அபாயகரமானவை. கர்ப்பிணிப் பெண்கள் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெண்கள் ஆகியோரை எளிதில் தாக்கி இரத்தப்புற்றுநோய் தோல் புற்றுநோய் மூளைபாதிப்பு வலிப்பு போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் கதிரியக்கதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை தலைவலி ஞாபகமறதி நரம்பியல் சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம் தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற எண்ணிலடங்கா பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

தொலைத் தொடர்புக் கோபுரத்தின் கதிரியக்கத்தால் கோவையில் காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவன் அதிகமான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான். இந்த மாணவனுக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதற்கு செல்போன் கோபுரத்தின் அருகில் வசிப்பதே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.(ஆதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-17.06.14).
இவர்களைப்போல் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்களை அறியாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பாதிப்பிற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கே தெரியாது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா தனது அறிக்கையில் செல்போன் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் சிறுவயது குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய்கள் அதிகம் வருவது ஆதாரப்பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனங்கள் அரசு விதித்திருக்கும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விரோதமாக மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும் அடுக்குமாடிகளிலும் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்.

நமது நாட்டிலும் இதே நிலை தான்… கேட்பவர்கள் எவரும் இல்லாத படியினால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பண ஆசை காட்டி கிராமப் புறங்களில் காணிகளை மலிவாக பெற்றுக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கே உலை வைக்கின்றனர்… எமது யாழ்ப்பாணத்திலும் வலிகாமம் யாழ் நகரம் வடமராட்சி தென்மராட்சி போன்ற ஜன நெரிசல் மிக்க பகுதிகளிலு ம் குடியிருப்புகளுக்கு இடையிலும் பல தொலை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைபேசிக் கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளமையை காண முடியும் .இவற்றிற்கு அருகில் வசிக்கும் பிள்ளைகள் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தலை வலி முதல் பலவிதமான புற்று நோய்களினால் அவதிப்படுகின்றார்கள். ஆனால் இங்கு சட்டரீதியாக குறித்த அலைபேசி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எமது சமூகம் பின்னடிக்கின்றது. இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கூட எவரும் முன்வருவதில்லை. காரணம் குறித்த நிறுவனங்கள் அனைத்துமே எம்மவர்களை பண ஆசை காட்டி தமது வலையில் வீழ்த்தி வைத்திருப்பதே.

இலங்கையில் போருக்கு பின்னரான கடந்த பத்து வருடங்களில் குறித்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருகை தமிழர் தாயகத்தில் மிக வேகமாக அதிகரித்து விட்டது. இவற்றின் நீண்ட தாக்கத்தை இனிவரும் பத்து முதல் இருபது வருடங்களில் எமது சமூகம் அதிகமாக அனுபவிக்க வேண்டியிருக்கும்.அப்போது தான் எம்மவர்கள் விழிப்படைவார்கள்…. மிகவும் அபாயகரமான சூழலில் இருந்து தமிழ் இனத்தை மீட்டெடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இதனை எமது அரசியல் தலைமைகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை இணைந்து மேற்கொள்ள வேண்டும்…

இல்லாவிடின் அபாயகரமான நோய்கள் வேகமாக அதிகரித்து எமது சந்ததிகள் தீர்க்க முடியாத நோய்களுடன் காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும்.இவை அனைத்தையும் தவிர்க்க விழிப்புணர்வு ஒன்றே இதற்கான ஒரே வழி.

கொடிய நோய்களை ஏற்படுத்தி நமது சந்ததியினரையும் சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராடுவோம்!
இயற்கையையும் மனிதகுலத்தையும் காத்திடுவோம்!

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்