ஐ.பி.எல் ஏலம்…. ரூ. 4.8 கோடிக்கு வாங்கப்பட்ட 17 வயதுச் சிறுவன்…!! யார் அவர் தெரியுமா…?

ஐபிஎல் 2019-க்கான ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 17 வயதான இளம் வீரரை ரூ. 4.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.2019-க்கான ஐபிஎல் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பிரப் சிம்ரன் சிங் (17) என்ற இளம் வீரரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 4.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரரான சிம்ரன் சிங், தனது வயதுடைய வீரர்கள் விளையாடும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த வாரம் கூட இலங்கை அணிக்கு எதிரான ACC Emerging அணிகள் ஆசிய கிண்ண போட்டியில் சிம்ரன் சிங் பிரமாதமாக விளையாடினார்.சிம்ரன் சிங், பஞ்சாப்பை சேர்ந்த இன்னொரு இளம் வீரர் அம்மோல்பிரீத் சிங்கின் உறவினர் ஆவார்.

அம்மோல்பிரீத்தை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.80 லட்சத்துக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்