ரணில் மேற்கொள்ளவுள்ள அதிரடி தீர்மானம்! பச்சைக்கொடி காட்டினார் மைத்திரி

52 நாள் இடைவேளைக்கு பின்னர் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்க, தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றையே அமைக்கவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள 30 பேர் கொண்ட அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 பேரும் அடங்கவுள்ளனர்.இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பேர் தேசிய அரசாங்கத்துக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்