வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கான Startup Toolkit நிகழ்ச்சித்திட்ட அறிமுகமும் ஒருநாள் செயலமர்வும்…..

எதிர்வரும் 22ம்திகதி மார்கழி 2018 அன்று North East Federation of Chamber of ICT(NEFCICT)யின் மட்டக்களப்பு பிராந்திய செயற்குழுவின் ஏற்பாட்டில், SLIATE வளாகத்தில் முதன்முறையாக சுயதொழில் முயற்சியாளர்கள், இளமானி பட்டதாரிகள், உயர்கல்வி மாணவர்கள், மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான எதிர்பார்ப்புடனிருக்கும் முயற்சியாளர்கள், தொழிற்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்க‌ளையும் ஒன்றிணைத்து Startup Toolkit எனும் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன் இதன் முதற்கட்டமாக ஒருநாள் பயிற்சி செயலமர்வும் அன்று நடைபெற உள்ளது.இவ்நிகழ்ச்சித்திட்டமானது தொழிற்துறை நிபுணர்களினால் எமது பிராந்தியத்திற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒருநிகழ்ச்சித் திட்டமாகும். ஓருகீழ்நிலை பிரஜையும் சுயதொழில் ஒன்றினை எவ்வாறு ஆரம்பிப்பது, திட்டமிடுவது ,மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது, நிதித் தேவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை கருத்தில்கொண்டு, சுயதொழில் முயற்சியாளர்கள், இளமானிப்பட்டதாரிகள், உயர்கல்வி மாணவர்கள், மற்றும் சுயதொழில்தொடங்குவதற்கான எதிர்பார்ப்புடனிருக்கும், முயற்சியாளர்களிற்கு ஒருவரப்பிரசாதமான ஒருவழிகாட்டி நிகழ்சியாக அமையவிருப்பது சிறப்பம்சமாகும்.

மேலும் இச்செயலமர்வானது முதன் முறையாக வளவாளர்களுடனான One to One கலந்துரையாடல்ஏற்பாடுகளும், தங்கள் வியாபாரத்தினை அடுத்த நகர்விற்கு கொண்டு செல்வதற்குரிய தனிப்பட்ட ஆலோசனைகளையும், அவ்விடத்திலேயே பெற்றுக்‌கொள்ளுவதற்கான தன்னம்பிக்கையினை வளர்க்கும் முகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

NEFCICT இன் ஒருங்கமைப்பின் கீழ், விஷேடமாக இத்துறையில் பலவருடநிபுணத்துவம்பெற்ற,வளவாளர்களினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் நிகழ்ச்சித்திட்டமானது,முற்றிலும் இலவசமாக,எமது பிரதேசமக்களின் நலன்கருதி,ஆரையம்பதியில்அமைந்திருக்கும் SLIATE வளாகத்தில் நடைபெறுவதுடன்,பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்கள், மாதிரி வியாபாரத்திட்டம், Toolkit CD மற்றும் மதியபோசனம் போன்றவையும் வழங்கப்படவிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்சித்திட்ட செயலமர்விற்கான பதிவுகள் 100 முற்பதிவுகளுடன்மட்டுப்படுத்தப்படுவதோடு, பதிவுகளை பின்வரும் இணைப்பில் மேற்கொள்ளவும் முடியும்.

Registrations

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScay9TEbZibrT_VteeXRWco63-SLka9TLdMUNfFqG5f41LXiA/viewform

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்