2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றெடுத்தது பாகிஸ்தான்…..!!

எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 1894 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.இதேவேளை இவ் ஆண்டு இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந் நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.இறுதியாக இத்தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம், கடந்த 2008 இல் பாகிஸ்தானிலேயே நடத்தியது. ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதன் பின் பாகிஸ்தானில் எவ்வித கிரிக்கெட் தொடரும் இதுவரை நடத்தப்படவில்லை.

எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க ஐ.சி.சி. இந்த அனுமதியை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.எனினும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் தொடரின் பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், பாதி போட்டிகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்