மஹிந்தவின் நெருங்கிய தோழி நீதிபதி ஈவா வனசுந்தர எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருக்கின்றார்.முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.உயர் நீதிமன்றத்தில் 502ஆவது அறையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹார மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணை இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

வழக்கு விசாரணைக்காக நீதியரசர்கள் குழாம் வந்து அமர்ந்ததை அடுத்து உரையாற்றத் தொடர்ங்கிய நீதியரசர் புவனெக்க அலுவிஹார, நீதியரசர் ஈவா வனசுந்தரவின் ஓய்வினை அறிவித்திருக்கின்றார்.40 வருடகாலச் சேவையை இன்றுடன் பூர்த்தி செய்யும் நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போகிறாரென அறிவித்ததோடு, அவருக்கான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் செயற்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் சார்பில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த மனுவை, நீதியரசர் ஈவா வனசுந்தர தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது என, ரணில் விக்கிரமசிங்க தரப்பினாரால் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதியரசர் ஈவா வனசுந்தர பங்கேற்காத- உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழுவே விசாரிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.மகிந்த ராஜபக்சவின் சட்டக்கல்லூரித் தோழியான நீதியரசர் ஈவா வனசுந்தர, மகிந்த ராஜபக்சவினாலேயே உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் நெருங்கிய நட்புள்ளவர்கள் என்பதால் மகிந்த ராஜபக்சவின் மனுவை நீதியரசர் ஈவா வனசுந்தர விசாரிக்கக் கூடாது என்று, குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நீதியரசர் ஈவா வனசுந்தரவின் இறுதி வழக்காக மஹிந்த ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்