வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கும் சென்று பயணிகளை எற்றிச் செல்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.புதியபேருந்துநிலையத்தில் சேவையில்ஈடுபடும் உள்ளூர் பேருந்து சேவைகளை பழையபேருந்து நிலையம்வரை விஸ்தரிக்குமாறு வவுனியா வர்தகர்சங்கம், ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கமைவாக இன்றிலிருந்து பேருந்துச் சேவைகள் பழைய பேருந்து நிலையத்துக்கும் செல்லும். அதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன், மாவட்டச் செயலர் எம்.கனீபா, பிரதேச செயலர் கா.உதயராஜா, நகரசபைச் செயலாளர்,தயாபரன், உப நகரபிதா சு.குமாரசாமி, ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் கு.திலீபன், மேலதிக மாவட்டச் செயலர் தி.திரேஸ்குமார்,பொலிஸ் அத்தியட்சகர் எம்.தென்னகோன், வர்தகர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்