இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார் ஜனாதிபதி மைத்திரி….!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கிளிநொச்சி இரணைமடு குளம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுனவால் விவசாயிகளிடம் இன்று கையளிக்கப்பட்டது.போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில்,  இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, விவசாயப் பிரதிகளிடம் விவசாயப் பாவனைக்குக் கையளித்தார்.

வடக்கின் பொக்கிஷம் இரணைமடுகுளத்தின் வான்கதவுகளை திறக்க ஐனாதிபதி விஐயம் நேரலையாக.

Posted by Capital FM 94.0 & 103.1 on Thursday, December 6, 2018

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்