மன்னார் மனிதப் புதைகுழியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலும்புக் கூடு!!

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.நேற்று(06)இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போதே குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக் கூட்டின் இரு கால்களும் இரும்புக்கம்பியுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன.குறித்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டமை அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை மன்னார் புதைகுழியிலிருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் பல்வேறு எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்