இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (இன்றைய ராசி பலன் 07.012.2018)

07-12-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 21ம் திகதி, ரபியுல் அவ்வல் 28ம் திகதி, 07-12-2018 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி மதியம் 1:28 வரை; அதன்பின் வளர்பிறை பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : மகாலட்சுமி வழிபாடு.மேஷம் :
புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர்.

ரிஷபம் :
செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும்.முக்கிய செலவுக்கு கடன் பெறுவீர்கள். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

மிதுனம் :
பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். பிரச்னைகளில் சுமூக தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும்.உபரி வருமானம் கிடைக்கும். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம் :
நல்லவர் செயலையும் தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு உதவும்.அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

சிம்மம் :
உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும்.சிறுஅளவில் கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் அறிவுப்பூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி :
வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும்.தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம் :
மனதில் தற்பெருமை குணம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து செயல்படவும்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற இனிய அணுகுமுறை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம் :
எதிர்கால நலனில் வளரும். நண்பரின் ஆலோசனை பயன் தரும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். அதிக பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு :
சிலர் சுயலாபத்திற்காக பழகுவர். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது.அளவான பணவரவு கிடைக்கும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மகரம் :
மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் வளம் பலவும் பெறுவீர்கள்.உபரி பணவரவில் குடும்பத்தின் அத்தியாவசிய தேவை நிறைவேறும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள்.

கும்பம் :
நேர்மை மற்றும் சத்திய குணம் பின்பற்றுவீர்கள். சோதனைகளை தாண்டி உரிய நன்மை வந்து தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

மீனம் :
சொந்த பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும்.அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்