பொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து புதிய பிரதமர் தெரிவு…?

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மன்ற உறுப்பினர்களின் பொது இணக்கத்தின் அடிப்படையிலேயே பிரதமர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து இதற்கான கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக அரசாங்க செய்தித்தாள் கூறுகிறது.ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், 24 மாகாணசபை உறுப்பினர்கள், 43 உள்ளூர் மன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளரிடமும் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது சஜித் பிரேமதாஸவோ என்றில்லாமல் நடைமுறை அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்து பிரிவினரின் ஒப்புதலும் பிரதமர் நியமிப்பில் அவசியம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்