நாடாளுமன்ற இணையத் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

நாடாளுமன்றின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இணைய தளத்தில் பிரதமரின் பெயராக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மஹிந்தவின் பெயரே நாடாளுமன்ற இணைய தளத்தில் பிரதமரின் பெயராக காணப்பட்டது.எனினும், தற்பொழுது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற இணைய தளத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையின் நாடாளுமன்றில் தற்பொழுது பிரதமர் ஒருவர் கிடையாது என்பது நாடாளுமன்றின் அதிகாரபூர்வ இணைய தளத்தின் ஊடாகவும் வெளிப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்