தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கெளதம் கம்பீர்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 வருடாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வரும் கம்பீருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்புகள் கை நழுவிப் போன காரணத்தினாலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

37 வயதாகும் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் 104 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 4154 ஓட்டங்களையும் 9 சதங்களையும், 22 அரை சதங்களையும் பெற்றுள்ளார்.ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் 147 போட்டிகளில் விளையாடி 143 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 5238 ஓட்டங்களையும் 11 சதங்களையும், 34 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் கம்பீர், 37 போட்டிகளில் 36 இன்னிங்ஸுக்களில் 932 ஓட்டங்களையும் 07 அரை சதங்களை பெற்றுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியே இவரது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. அப் போட்டியில் கம்பீர் முதல் இன்னிங்ஸில் 29 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் எதுவித ஓட்டங்களை பெறாமலும் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்