இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (இன்றைய ராசி பலன் 05.12.2018)

05-12-2018 புதன்கிழமை விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 19-ம் நாள். தேய்பிறை. திரயோதசி திதி நண்பகல் 12.47 மணி வரை பிறகு சதுர்த்தசி.

விசாகம் நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 4.32 மணி வரை பிறகு அனுஷம். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.
குளிகை: 10:30 – 12:00.
சூலம்: வடக்கு.

பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

பரிகாரம்: பால்.மேஷம்:

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும்.வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுப் படுத்துவது குறித்து யோசிப்பீர்கள்.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.

மிதுனம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்:

பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்துநீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக் குரியவர்கள் உதவுவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

துலாம்:

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளிடம்அதிக உரிமை எடுக்க வேண்டாம். இடம்பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவு களால் சேமிப்புகள் கரையும்.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

தனுசு:

இஷ்டதெய்வ அருள்பலம் துணை நின்று உதவும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாணவர்கள் முயற்சியால் படிப்பில் முன்னேறுவர்.

மகரம்:

எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்:

சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண்பழிச்சொல் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்