எப்போதும் இந்த ராசிகாரர்களிடம் மட்டும் ஜாக்கிரதையா இருங்க.. எந்தெந்த ராசிகாரர்கள் தெரியுமா?

வாழ்க்கையில் எப்போதும் எல்லா நேரத்திலும் ஒரு சிலரை மட்டும் வாழ்க்கையில் நம்பவே முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லா நேரத்திலும் நமக்கு சாதமாகவே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒருத்தரையும் நம்பாமல் இருப்பதும் தப்பு எல்லாரையும் நம்புவதும் தப்பு போன்ற நிறைய அறிவுரைகளை நாம் கேட்டு இருப்போம். ஒரு குழந்தை பிறந்து வளர ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் யாரை நம்பக் கூடாது போன்ற அறிவுரைகளை பெற்றோர் கூற ஆரம்பித்து விடுகிறார்கள்.இந்த நம்பிக்கைக்கும் உங்கள் ராசிக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. கீழ்க்காணும் ராசிக்காரர்களுடன் நம்பிக்கை ஏற்படுத்துவது முன்னாடி இரண்டு முறை யோசிப்பது நல்லது என்று இந்த ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய இலக்குகளை அன்போடு அணுகுவார்கள். இவர்கள் தங்கள் அருகில் உள்ள நண்பர்களை உண்மையாக நேசிப்பார்கள். ஆனால் அவர்களுடைய அன்பாலயே உங்களை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடுவார்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள். எனவே ரிஷப ராசிக்கார்களை முழுமையாக புரிஞ்சு கிட்டு நம்பிக்கை மேற்கொள்வது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக உணர்ச்சி மிக்கவராக இருப்பார்கள். ஒரு நபரின் உணர்வுகளை காயப்படுத்த வேண்டாம் என்று இவர்கள் நினைப்பதால் மற்றவர்களுடன் பொய் சொல்வார்கள். இவர்கள் நிறைய பேர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பது தான் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இருவர் நெருங்கிய நண்பர்களாக இல்லாத போதும் இவர்களுக்கிடையே துலாம் ராசிக்காரர்கள் நடுவில் இருந்து செயல்படுவீர்கள். மற்றொரு நபரின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அவர்கள் பொய் சொல்லும் போது மற்றொரு வாதத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் பெரிய பொய் சொல்ல முயல்வீர்கள்.

மிதுனம்
இவர்கள் அன்பு – அரட்டைக்கு பேர் போனவர்கள். இதனாலேயே அவர்கள் எல்லாவற்றையும் விரும்புவார்கள். இவர்கள் அருகில் உட்காரும் போது அவர்களின் ஆர்வம் சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தூண்டும். ஆனால் இது உங்களிடையே ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தினாலும் அடுத்த தடவை உங்கள் ரகசியங்களை இவர்கள் வெளிக்காட்டி வேடிக்கை காண்பித்து விடுவார்கள். ஏனெனில் உங்களுடைய ரகசியங்களை காப்பதில் இவர்கள் வெகுளியாகவே இருப்பார்கள். எனவே உங்கள் மிதுன ராசி நண்பர்களை உண்மையிலேயே அறிந்து கொண்டு செயல்படுங்கள்.

தனுசு
சாகச காதலன் என்றால் அது தனுசு ராசிக்காரர்கள் தான். இவர்கள் உங்களுடைய ரகசியங்களை எளிதாக கண்டுபிடித்திடும் சாகசக்கார்கள். எது சரி எது தவறு என்று இலக்கை குறித்த எண்ணத்தோட இவர்கள் இருப்பதால் நட்பில் மிகுந்த ஈடுபாடு கொள்வதில்லை. இதனால் இவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. நண்பர்கள் மேல் அக்கறையோடும் இருப்பார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்