சமூக வலைத்தளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவோம்….சங்கானையில் விழிப்புணர்வு!

சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் எற்பாட்டில் ‘சமூக வலைத்தளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்தல்’ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது.

பண்டத்தரிப்பு மறுமலர்ச்சி மன்றத்தின் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.இதில், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் கெளரவ நடனேந்திரன் மற்றும் கெளரவ உறுப்பினர் ஜெயந்தன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு அகிலராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.மேலும், இந்நிகழ்வில் வளவாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளர்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதன் விளைவான அதிகரித்தே செல்கின்ற நிலையில், அவற்றை தற்பாதுகாப்புடனும், சமூக பாதுகாப்புடனும் கையாள்வது கட்டாயமாகிறது. கல்வி அறிவுடையோர் மற்றும் கல்வி அறிவை பெறத் தவறியோர் என அனைவரும் கையாளும் ஒரே ஊடகம் முகநூல் உள்ளிட்ட சமூன வலைத்தளங்கள். இது தகவல்களை விரைவாக அறியவும், பகிரவும் சிறந்த தொடர்பாடல் களமாக விளங்கும் அதே சமயம் பின்விளைவுகளும் அதிகமாக உள்ளன.

குறித்த பின் விளைவுகள் தனி மனிதன் சார்ந்தோ அல்லது சமூகம் சார்ந்தோ மட்டுமின்றி ஒரு நாடு சார்ந்தும் அமைகின்ற நிலையில் அதன் பயன்படுத்துனர்கள் பெற்றிருக்க வேண்டிய பொறுப்புணர்வு முக்கியமானதாக விளங்குகின்றது.அந்த வகையில் எதிர்கால சந்ததியை நல்வழிப்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்