சபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த! உடன் தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை….!!

நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் குழப்பத்துடன் ஆரம்பித்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு உரையாற்ற விடாமல் பல தரப்புகள் எதிர்ப்பு வெளியிட்டனர்.இந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு பேச அனுமதி வழங்குங்கள் என குறிப்பிட்டார்.

இதனால் கடுப்பாகிய மஹிந்த, தான் பிரதமர், உறுப்பினர், ஜனாதிபதி அல்லது அமைச்சர் என்றாலும் தான் மஹிந்த ராஜபக்ச தான். அதனை யாராலும் தவிர்கக முடியாது. உறுப்பினர் என கூறினாலும், நான் மஹிந்த ராஜபக்ச தான் என கடும் கோபமாக சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.நான் அனைத்து துறையிலும் செயற்பட்டேன் என்பதனை சபாநாயகர் முதலில் புரிந்து கொண்டு பேச வேண்டும். அதனை நினைவில் வைத்து கொள்ள கொள்ள வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தனது உரையை ஆரம்பித்த மஹிந்த உறுதியாக பொது தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LIVE from Parliament

LIVE from Parliament – Tense situation following speech of PM Mahinda Rajapaksa

Posted by Newsfirst.lk on Wednesday, November 14, 2018

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்