வேகமாகச் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல் களம்…..!! தேர்தலை இலக்காகக் கொண்டு ஹக்கீம், ரிஷார்ட் மக்காவில் இணைவு….!!

சவூதி அரேபியாவிலுள்ள புனித மக்காவுக்கு சென்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.மக்கா ஹரம் ஷரீபிலில் உள்ள ஹோட்டலில் நேற்று சந்தித்துள்ள இவர்கள் இலங்கையின் அரசியல்களம் சூடுபிடித்துள்ளமை குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், இவர்கள் இருவரும் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்