இன்று காலை ஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம்….. கதறி அழும் பெற்றோர்கள்….!!

பலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் – எழுவில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செல்வரத்னம் டிஷான், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரவணபவன் கோபிஷான் மற்றும் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்