ஆற்றில் நீராடச் சென்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் பரிதாப மரணம்…!!

இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்