ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம்… ஐ. தே.க சூளுரை…!

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது தடுமாறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதியொருவர் மற்றுமொரு அநாதரவான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருக்கின்றார்.ஜனாதிபதி நவம்பர் 9 ஆம திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தைகலைக்க எடுத்தத் தீர்மானம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர்மங்கள சமரவீர இந்த நடவடிக்கை அப்பட்டமாக அரசியல் சானத்தை மீறிய செயல் என்றும்குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஜனநாயகம், ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் சட்டத்தின்ஆட்சியை மதிக்கும் அனைவரும் இணைந்து நாட்டில் தலைதூக்கியுள்ள அராஜகத்தை தோற்கடிக்கமுன்வர வேண்டும் என்றும் மங்கள சமரவீர பகிரங்க கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரானநாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இதுவரைகாலமும்சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று அழைக்கப்பட்டுவந்த எமது நாட்டின் பெயரில்இருந்த ஜனநாயகம் என்ற சொல் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும்எதிராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்தடுத்து மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள்காரணமாகவே இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின்ஊடகப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நள்ளரவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மானும், மைத்ரியின்நடவடிக்கை அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்