பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதித் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்த வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தலில் தெரிவாகும் பிரதிநிதிகளைக் கொண்டு 2019 ஜனவரி 17 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்