அனைவருக்கும் சமாதானம் வேண்டி கிளிநொச்சியில் தனி மனிதனாகப் போராட்டம் நடத்தும் சிங்களவர்…!!

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் சிங்கள நபர் ஒருவரால் தனி மனித போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மெனிக்ஹின்ன பகுதியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்ற நபரே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் இதே போன்றதொரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

“கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில், வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து, உலக சமாதானம் உருவாக வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கள நபர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்