கைதடி நவீல்ட் பாடசாலை மாணவா்களுக்கு பிரபல தனியார் நிறுவனத்தினால் ஸ்மார்ட் வகுப்பறை…..!!

யாழ்.கைதடியில் உள்ள நவீன் பாடசாலை மாணவர்களுக்காக ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தினால் அமைத்து கொடுக்கப்பட சிமாட் வகுப்பறை திறப்புவிழா நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.அப் பாடசாலையில் கல்விகற்க்கும் விசேட தேவையிடைய மாணவர்கள் தமது தொழில்நுட்ப கல்வியை வளர்த்து கொள்ளும் முகமாக சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறையை ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெனோத தொறதெனிய சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். மேலும் இவ் நிகழ்வில் ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின்வெவ்வேறு பிரிவுகளின் முகாமையாளர்களான அசோக் சந்திர சேகரம், அசோக் பாலசுந்தரம், நெவில் சமரநாயக்க, சுஜீவ ராஜபக்ச, லந்திறா, பிரசன்ன வீரக்கோன், சஞ்சீவ டிசேரம், பி.சயந்தன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்