சுவிஸில் ஏற்பட்ட பாரிய விபத்து – ஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் கவிஞர்பூவதி என்ற புனைப்பெயருடன் பூவதியின்புலம்பல்கள் எனும் கவிதை தொகுப்பினை வெளியிட்டு புகழ்பெற்ற கஜன் என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

நேற்று அதிகாலை இவர் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட வேளை பாரிய வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்