நடு வீதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேரூந்துகள்….47 பேர் துடிதுடித்துப் பலி…. பலர் படுகாயம்..!!

ஆப்ரிக்க தேசத்தில் உள்ள ஜிம்பாவேயின் தலைநகரான ஹராரே நகரம். இந்த நகரில் இருந்து ருசாபே நகருக்கு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.அதே போல் ருசாபே நகரில் இருந்து ஹராரே நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.இந்த இரண்டு பேருந்துகளும் ருசாபே நகருக்கு வரும் வழியில் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலத்த காயத்துடன் அலறித்துடித்தனர்.இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அதே சாலையில் பயணித்த பிற வாகனஓட்டிகள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் வழங்கினர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட துவங்கினர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பயணிகளை அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி தெரிவித்துள்ளதாவது.இந்த விபத்தில் சுமார் 47 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்