இந்தியாவில் பிறந்து அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழன்…!!

அமெரிக்காவில் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று இருக்கிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்த தேர்தல் ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை தழுவியது.எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் இல்லினாய் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு இரண்டாவது முறையாக தெரிவாகியுள்ளார். டெல்லியில் வசித்து வந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார்.அங்குள்ள பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்களில் இவர் படித்து முடித்தார்.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி, குடியரசு கட்சியை சேர்ந்த இந்தியரான ஜெடி டிகன்கேரை 30 சதவித வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.அதேபோல் சென்னையில் பிறந்து வளர்ந்த கேரளாவைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் என்ற பெண்ணும், வாஷிங்கடன் தொகுதியில் இருந்து பிரநிதிகள் சபைக்கு தெரிவாகியுள்ளார்.

அத்துடன், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அமி பேரா மற்றும் ரோ கண்ணா ஆகியோரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 9 இந்தியர்கள் மாநில சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்