சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்குமா அவுஸ்ரேலியா அணி?

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், தென்னாபிரிக்கா அணிக்கு டு பிளெஸிசும் தலைமை தாங்கவுள்ளனர்.அவுஸ்ரேலியா அணிக்கு மிக முக்கியமான தொடராக, இத்தொடர் அமையவுள்ளது. முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர், அவுஸ்ரேலியா அணி தொடரைக் கைப்பற்றவில்லை.

அத்தோடு, தென்னாபிரிக்கா அணியுடன் போதேயே, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.

திறமையான வீரர்களை கொண்ட தென்னாபிரிக்கா அணி, தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்நிலையில், பலம் பொருந்திய தென்னாபிரிக்கா அணியை, வலுவிழந்து காணப்படும் அவுஸ்ரேலியா அணி, சொந்த மண்ணில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்