அங்கவீனமுற்ற படையினர், மாணவர்களுடன் ரி – 20 ஐ கண்டுகளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்…

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அனுமதியின் கீழ்,இலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான ‘இருபதுக்கு – 20’ போட்டியைக் கண்டு களிப்பதற்காக 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.கொழும்பு – கெத்தாராம ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியை எவ்வித சலிப்புமின்றி இறுதிவரை பாடசாலை மாணவர்களும் அங்கவீனமுற்ற படை வீரர்களும் கண்டு களித்து மகிழ்ந்தனர். இவ்வாறு, மாணவர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்கள் என அனைவரும் மிக்க மகிழ்ச்சியோடு குறித்த போட்டியைக் கண்டுகளித்தமையை, பார்தது தான் பெரிதும் சந்தோஷமடைவதாக, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் நான், இவர்களுடன் பல வேலைப்பழுகளுக்கு மத்தியிலும் களியாட்ட மற்றும் சங்கீத நிகழ்வுகளிலும் கலந்து கொண்டேன். இதுவும், எனக்கு பெரும் திருப்தியையும், கெளரவத்தைத் தந்ததாகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்