விளக்கு ஏற்றும்போது இதை கண்டிப்பாக கடைபிடிக்கவும்

பெரும்பாலான வீட்டில் உள்ள பூஜை அறைகள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாடர்னாக அமைக்கப்பட்டுவிட்டன. பூஜை அறையில் ஏற்றும் விளக்குகளும் தற்போது தங்கத்திலும், வெள்ளியிலும் மாறிவிட்டன.

இந்நிலையில், தங்கம் தானே அழுக்கு பிடிக்காது என நினைக்க கூடாது. தினமும் அதை சுத்தம் செய்ய வேண்டும். இதிலும், பித்தளை விளக்காக இருந்தால் கண்டிப்பாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். விளக்கு என்பது வெளிச்சம் சம்பந்தப்பட்ட சமாசாரம் இல்லை. அது மங்களகரமானது. வெறும் வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமானால் மின்விளக்கே போதுமே.

விளக்கு எரிகிறது என்றால் அங்கே அக்னி பகவான் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், விளக்கில் உபயோகப்படுத்தும் திரியையும் தினம் மாற்ற வேண்டும்.

தினமும் திரி மாற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சோம்பலாக இருந்தால் விளக்கே ஏற்றாதீர்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டாலே போதும்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்