என்ஜின் இல்லாத ரயில் தமிழகத்தில் அறிமுகம்….!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

எஞ்சின் இல்லாத ரயில் என வர்ணிக்கப்படும் ரயின் 18 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.மின் வழித்தடத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ரயில் சுமார் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தில் முழுமையாக சென்னை ஐ.சி.எஃப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயில், சதாப்தி ரயிலுக்குப் பதில்லாக பயன்படுத்தப்படவுள்ளது.

முழுமையான குளிர்சாதன வசதிகளுடன் (AC) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் 16 பெட்டிகள் சேர்கார் வசதியுடனும், 2 பெட்டிகள் எக்சிக்யூட்டிவ் சேர் கார் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.எக்சிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் சுழலும் வசதியுடன் அதன் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய உள்வடிவமைப்பு, வைஃபை, (wi-fi) ஜி.பி.எஸ். (GPS) உள்ளிட்ட தகவல் முறைமை வசதிகள், ஊனமுற்றவர்களுக்கான கழிப்பறைகள்(disabled-friendly toilets), தானியங்கி கதவுகள், உயிரியல்-வெற்றிட அமைப்புகள் கொண்ட கழிப்பறைகள் (modular toilets with bio-vacuum systems), அத்துடன் ரோலர் blinds பாரிய LED மின்விளக்குகள்(roller blinds and diffused LED lighting) போன்றவை இடம்பெற்றுள்ள.

இந்தநிலையில், குறித்த வசதிகளுடன் கூடிய எஞ்சின் இல்லாத ரயில் என வர்ணிக்கப்படும் ரயின் 18 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.மேலும், ரயின் 18 சில மாத சோதனை ஒட்டத்துக்குப் பிறகு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்