சாரதி இல்லாமல் பறக்கும் கார்…. சிங்கப்பூரில் அறிமுகம்…!!

சாரதி இல்லாமல் செலுத்தக் கூடிய பறக்கும் கார் (hover-taxi )அடுத்த வருடம் சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படவுள்ளது.ஜேர்மனியைச் சேர்ந்த வோலோ கொப்டர் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.இந்த பறக்கும் கார் ஹெலிக்கொப்டரின் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை நிலைக்குத்தாக மேலெழும்பச் செய்து, நிலைக்குத்தாக இறக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

வோலோ கொப்டர் நிறுவனம் ட்ரோன் தொழில்நுட்பத்தில் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. ஆசிய நாடுகளில் துரிதமான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது இதன் முக்கிய நோக்கமாகும்.மேலும், இது 100 மீட்டர் (330 அடி) விமான உயரத்தில் பறக்கக் கூடியதாகவும் மேலும், எந்தவெரு இரைச்சல் சத்தங்கள்யின்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துரிதமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கவும் இவ்வாறான கண்டுபிடிப்புக்களை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்